அரசாங்கத்தை குழப்பும் விமல் அணிக்கு ராஜபக்ஷ குடும்பம் எச்சரிக்கை

141112182220 wimal weerawansa 512x288 bbc
141112182220 wimal weerawansa 512x288 bbc

அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு குழப்பம் விளைவிக்கும் விமல் வீரவன்ச அணியினர் அவர்களாக விலகுவதற்கு முன்னர் விரட்டி அடிக்கப்படுவர் என ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கியஸ்தரும் உக்ரைனுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூலில் விமல் அணியை எலும்புத் துண்டுக்கு அலையும் விலங்கிற்கு ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.

ஆபிரிக்க காட்டில் உள்ள ஹைனா என்ற விலங்கு சிங்கத்திற்கு பின்னால் சென்று சிங்கம் வேட்டையாடி முடித்த பின் இருக்கும் மிச்சத்தை உண்ணும் விலங்கு எனவும் ஆனால் தான் வேட்டையாடி உண்பதாக அதற்கு நினைப்பு எனவும் ஒருநாள் சிங்கம் இந்த ​ஹைனாவையும் வேட்டையாடி உண்ணும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் அரசாங்கத்திற்குள் இருந்து சுவர் உடைத்துக் கொண்டு வௌியில் சென்று ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களை அரசாங்கம் முன்கூட்டியே விரட்டி அடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.