கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்தை நெருங்கியது

illustrated coronavirus concept wallpaper 23 2148482240
illustrated coronavirus concept wallpaper 23 2148482240

நாட்டில் மேலும் 318 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 308 பேர் மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், சிறைச்சாலை கொத்தையில் நெருங்கிய தொடர்பு கொண்ட 09 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 869 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 3 ஆயி த்து 367 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் 598 கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 80,020 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 438 பேர் வைத்திய கண் காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 483ஆக அதிகரித்துள்ளது.