மட்டக்களப்பில் 142 பேருக்கு டெங்கு

images 5
images 5

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பெப்ரவரி 19 ஆந் திகதி தொடக்கம் 26ம் திகதிவரையிலான ஒருவாரத்தில் 142 பேர் டெங்கு நோய் தாக்கத்திற் குள்ளாகியுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த டெங்கு தாக்கத்தினால் மண்முனைவடக்கு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 33 நோயாளர்களும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 நோயாளர்களும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 29 நோயாளர்களும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 நோயாளர்களும், கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 நோயாளர்களும் மண்முனைப் பற்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 நோயாளர்களும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 நோயாளர்களும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 நோயாளர்களும், ஏறாவூர் நகர், வாகரை, பட்டிப்பளை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 03 நோயாளர்களும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 நோயாளர்களும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 01 நோயாளருமாக மொத்தம் 142 பேர் டெங்கு நோய் பாதிப்புக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்;டுள்ளனர்.

இதேவேளை செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயினால் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இதுவரை மரண எண்ணிக்கை 2 ஆகவும் டெங்கு நோயாளர்கள் 2055 ஆகவும் அதிகரித்துள்ளது

எனவே பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கிகிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காதவகையில் சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.