வவுனியா தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல்!

vavuniya tmmv 720x405 1
vavuniya tmmv 720x405 1

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

பாடசாலையின் அதிபர் ஆ.லோகேஸ்வரன் தலைமையில் எதிர்வரும் 14.03.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ள பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக தெரிவில் பாடசாலையின் பழைய மாணவர்களை பங்கேற்குமாறு பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பாடசாலையில் பழைய மாணவர் சங்கத்தால் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனிநபர் பிரேரணைகள் இருப்பின் அவற்றை 12.03.2021 முன்னர் பாடசாலை அதிபரின் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.