கனியவளங்கள் அகழ்விற்கான அனுமதி வழங்குவதில் பல்வேறு அழுத்தங்கள் -மஸ்தான்

received 185982316634235
received 185982316634235

முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல் அகழ்வு கிரவல் அகழ்வு கருங்கல் அகழ்வு உள்ளிட்ட விடயங்களுக்கு அகழ்வு அனுமதி வழங்குவது தொடர்பில் மாவட்ட சமூக பாதுகாப்பு குழு கலந்துரையாடல் நேற்று (05) மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

received 437747854099969

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர்  மஸ்தான் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச செயலாளர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் குறித்த அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையுடன் தொடர்புடைய திணைக்கள  தலைவர்கள் அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்

இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கனியவளத்திணைக்களத்தால் கிரவல் மணல் அகழ்விற்கு வழங்கப்படும் றூட் போமிட் தொடர்பில் அரச அதிபருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

மணல்,கிரவல் கொண்டு செல்வதற்கான  வாகன வழித்தடம் றூட் போமிட்டில் போடப்படவில்லை வெறுமெனவே திருகோணமலை யாழ்ப்பாணம்  என்று போடப்படுவதால் பல நிர்வாக பிரச்சனைகள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.காவற்துறையினராலும்,நீதிமன்றத்தாலும் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.

received 1725997400937421
r

இந்த இயற்கை வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் ஒருசில காலங்களில் இல்லாமல் போய்விடும் இதனை சரியான முகாமைத்துவம் செய்து முறைப்படி கொடுப்பதும் அனுமதி வழங்கப்படும் இடங்களில் அகழ்வு சரியாக நடைபெறுகின்றதா என்ற கண்காணிப்பும் கேள்வியாக உள்ளது.

திருகோணமலையில் இருந்து வரும் றூட்போமிட்டினை வைத்துக்கொண்டு சிலாவத்தை பகுதியில் இருந்து மணலினை எடுத்து செல்கின்றார்கள் திருகோணமலை முல்லைத்தீவு முதன்மை வீதியில் ஏறியவுடன் றூட்போமிட் சரியாக வந்துவிடும் காவற்துறையினர் அதனை தடுக்கமுடியாத நிலை காணப்படுகின்றது.

இவ்வாறு சட்டத்தில்   கையினை போட்டு விளையாடுபவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்றார்கள் தொழில் போட்டி காரணமாக மனிதத்துவம் இல்லாத மனிதர்களாக  இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

received 263244785387496

இதேவேளை  இவ்வாறான மணல் அகழ்வு கிரவல்  அகழ்வு தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் மக்களால் முன்வைக்கப்படுகிறது அபிவிருத்தி குழு கூட்டங்களில் மிக நீண்ட நேரம் கதைக்கப்படுகிறது எனவே இவர்களுக்கான ஒரு சரியான தீர்வுகளை பெறவேண்டும்  அனுமதிப்பத்திரங்கள் வழங்குமாறு என்னிடம் பலர் கேட்க்கின்றனர் அமைச்சர்கள் சிலரும் கேட்க்கின்றனர் இவ்வாறு பல அழுத்தங்கள் பலருக்கும் இருக்கலாம் ஆனால் வளங்கள் பாதுகாக்கப்பட்டு எமது மக்களுக்கு கிடைக்கச்செய்த பின்னர் ஏனைய இடங்களுக்கு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லலாம்  எனவே இதற்கான ஒரு சரியான தீர்வை இந்த கூடடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்

இதனை தொடர்ந்து குறித்த கனியவளங்களை  உரிய வகையில் எவ்வாறு மக்களுக்கு வழங்குவது அபிவிருத்தி தேவைகளுக்கு வழங்குவது என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன இறுதியில் குறிப்பிட்ட சில நிபந்தனைகளோடு பிரதேசத்தின் சமூக பாதுகாப்பு குழு மற்றும் அதிகாரிகள் நேரடியாக கள  விஜயம்  மேற்கொண்டு சிபாரிசு செய்பவர்களுக்கு மாவட்ட குழு சிபாரிசு செய்து உரிய அனுமதிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது