சர்வதேச மகளிர் தினத்தில் நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

202002181731159488 Tamil News muslims dharna protest for 3rd day in Palani SECVPF 1
202002181731159488 Tamil News muslims dharna protest for 3rd day in Palani SECVPF 1

சர்வதேச மகளிர் தினமான நாளை (08.03.2021)முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து மகளிர் எமக்கு நீதி வேண்டும் என கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்களுடைய தொடர் போராட்டத்திற்கு இன்றுவரை நீதி கிடைக்காத நிலையில் நாளை (08.03.2021) சர்வதேச மகளிர் தினத்தில் நாம் வீதிகளில் தொடர்ச்சியாக போராடி வருகிறோம் ஆனால் இந்த அரசாங்கம் அதற்கான எந்தவித பதிலையும் வழங்கவில்லை என தெரிவித்து மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கே என்கின்ற நீதியான விடயங்கள் கிடைக்கப்பெற வேண்டும் என தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த வகையில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து நாளை (08.03.2021) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் செல்வபுரம் பகுதியில் நிறைவடைய இருக்கின்றது எனவே தமது நாளைய போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.