வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா!

vikatan 2020 04 f45d074e b3e4 4275 a972 d0d1cf3882dd Coronavirus research 2
vikatan 2020 04 f45d074e b3e4 4275 a972 d0d1cf3882dd Coronavirus research 2

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் வட்டுக்கோட்டை மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 409 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்களில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் 2 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சங்கானை மருத்துவ அதிகாரி பிரிவில் மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மூன்று பேர் யாழ்ப்பாண சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பிய நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். அவர்களிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் வெளிநாட்டு நுழைவுவிசாவுக்கு விண்ணப்பித்த மாணவன்.

மற்றையவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவர்.
மல்லாவி மீன் சந்தையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவாரத்திரி திருவிழாவுக்கு கடை அமைத்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் வீதி சீரமைப்புப் பணியில் ஈடுபடும் பணியாளர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.