சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்ட இரகசிய தகவல்கள் அடங்கிய ஆணைக்குழுவின் 22 பகுதிகள்!

d97055f5f9f6da1b04158b5f9db39c37
d97055f5f9f6da1b04158b5f9db39c37

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் இறுதி அறிக்கையில், இரகசிய விடயங்கள் அடங்கியதாக கூறப்படும் 22 பகுதிகள் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சட்டப் பிரிவு பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஹரிகுப்த சேனாதீரவினால் இந்த அறிக்கையின் பாகங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பாகங்கள் கடந்த 2 ஆம் திகதி சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 87 பாகங்களைக் கொண்டதாகும்.

இந்நிலையில், இன்று கையளிக்கப்பட்ட 22 பாகங்களும் ஆணைக்குழு முன்னிலையில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் அதிக இரகசியமானவை என சட்டத்தரணி ஹரிகுப்த சேனாதீர தெரிவித்துள்ளார்.