மட்டக்களப்பிலும் மீண்டும் பாடாசாலைகள் ஆரம்பம்!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

க.பொ.த.சாதாரண தர பரீட்சை மற்றும் கொவிட் 19 ஆகியவற்றினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள இன்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகள், மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டன.

கொவிட் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றபோதிலும் சுகாதார நடைமுறைகளை பேணியவாறு மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்ததை காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு அதிகளவில் இருந்ததாக வலய கல்வி பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதி, இரண்டாம் தவனை விடுமுறை கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.