கைதிகளை விடுவிக்க திட்டம்!!

nimal sripaladi silva
nimal sripaladi silva

நீண்டகாலம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறந்த ஒழுக்கத்துடன் செயற்பட்ட கைதிகளைப் புனர்வாழ்வளித்து சமூகத்துடன் மீளிணைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நீதி,மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சட்ட மாஅதிபர் அடங்கலாக நீதித்துறையுடன் பேசி உகந்த திட்டமொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலகத்துடன் தொடர்புள்ள மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், பாலியல் துஷ்பிரயோகம், கொலை போன்ற பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட மாட்டார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறைகளுக்குள் இருந்து குற்றச்செயல்களுக்கு தூண்டும் கைதிகள் குறித்து விசேட கவனம் செலுத்துவதற்காக சீசீரீவி கமரா தொகுதிகளை சகல சிறைச்சாலைகளிலும் அமைக்க இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.