இலங்கை ஊடகங்கள் மீது சுவிஸ் அரசு விமர்சனம்

swiss2
swiss2

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண் அதிகாரி 3வது நாளாக இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக சமூகமளித்திருந்தார்.

கடந்த 8ம் திகதி 9 மணி நேரம் வாக்குமூலமளித்தார். பின்னர் மறுநாள் திங்கம் கிழமை 6 மணி நேர வாக்குமூலமளித்தார். இந்த நிலையில் நேற்று 4 மணி நேர வாக்குமூலமளித்தார்.

கொழும்பில் தற்போதைய செய்தி ஊடகங்களின் நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளதுள்ளதுடன் ஊடகங்களை விமர்சித்து சுவிற்சர்லாந்து அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளளமையும் குறிப்பிடத்தக்கது,

இந்நிலையில் கடத்தப்பட்ட சுவிஸ் அதிகாரி தொடர்பிலான வழக்கினையும் அதனை சுற்றியுள்ள விசாரணையின் முன்னேற்றத்தையும் ஊடகங்கள் தடுக்க கூடும் என சுவிஸ் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.