முஸ்லிம்கள் தனித்து அரசியல் செய்வது பாதிப்பு

1 tapha
1 tapha

முஸ்லிம் கட்சிகள் எதிர்வரும் தேர்தல்களில் வடக்கு, கிழக்குடன் தங்களது அரசியல் நடவடிக்கைகளை முடித்துக் கொள்ளாது போனால், வெளியே ஏனைய பிரதேசங்களிலுள்ள 68 வீதமான முஸ்லிம்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களிலும் தங்களது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எனக்கூறப்படும் முன்னாள் அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் எதிர்வரும் காலங்களில் தங்களது அரசியல் நடவடிக்கைகளை வடக்கு, கிழக்குக்கு வெளியே மேற்கொள்வது அவ்வளவு சிறந்ததல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அரசியல் தலைவர்கள் தங்களது சுயலாப அபிலாஷைகளை கைவிட்டு பெரும்பான்மைச் சமூகம் தற்போது எந்த பக்கம் இருக்கின்றதோ அந்தப்பக்கம் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

இதுவே இந்நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துக்கு பொருத்தமான நிலைப்பாடாகும் எனவும் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார்.