வாகனங்களை பழுது பார்க்கும் நிலையத்தில் தீப்பரவல்

139423 fire breaks
139423 fire breaks

கொஹுவல நகரில் வாகனங்களை பழுது பார்க்கும் இடமொன்றில் ஏற்பட்ட தீவிபத்து தற்போது கட்டுபாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நேற்று (17) இரவு ஏற்பட்ட இந்த தீப்பரவல் தெஹிவலை,கல்கிசை மாநகர சபையின் தீயணைப்பு மற்றும் மின்சார சபை அதிகாரிகள் இணைந்து கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தினால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.