கல்முனை பாடசாலைகளுக்கு வெப்பமானி வழங்கும் நிகழ்வு

IMG 20210316 WA0082
IMG 20210316 WA0082

சிறுவர், மகளிர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் முன்பள்ளி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் முன்பள்ளிகளுக்கான கை கழுவும் இயந்திரம் மற்றும் வெப்பமானி வழங்கும் நிகழ்வு முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.சம்றினா ஹனீபாவின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான் ஆகியோரும் கலந்து கொண்டு 29 முன்பள்ளி பாடசாலை தலைமை ஆசிரியர்களிடம் இவ் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.