ஓட்டமாவடி விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாக தெரிவு

01 9
01 9

ஓட்டமாவடி 2ஆம் வட்டாரத்தில் ஹீரோ லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் பொதுக்கூட்டமும் 2021ஆம் ஆண்டிற்கான புதிய நிருவாகத் தெரிவும் ஓட்டமாவடி அமீர் அலி மைதான விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

கழகத்தின் தலைவர் எம்.எம்.றிழ்வான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஐ.ரி.அமிஸ்தீன், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் ஏட்.ஏ.சி.நியாஸ்தீன் மற்றும் கழகத்தின் அங்கத்துவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது புதிய நிருவாக சபை தெரிவு செய்யப்பட்டதில் தலைவராக எம்.எம்.றிழ்வான், உப தலைவராக ஏ.எஸ்.அமீர், செயலாளராக எஸ்.எல்.நளீர், உப செயலாளராக ஏ.எம்.எம்.சித்தீக், பொருளாளராக எச்எம்.ரஷீன், உப பொருளாளராக ஷைஹான்;முகாமையாளராக எம்.ஏ.இமாஸ், அமைப்பாளராக ஏ.எல்.எம்.பஸ்மின், இணைப்பதிகாரியாக எஸ்.எல்.அஸீஸ் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் கழக ஆலோசகர்களாக ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஐ.ரி.அமிஸ்தீன், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் ஏல்.ஏ.சி.நியாஸ்தீன், இராணுவ உத்தியோகத்தர் ஐ.எம்.புஹாரி, மௌலவி எம்.எம்.எம்.சபீர், எஸ்.எம்.ஹரிஷ், ஆசிரியர் எம்.எச்.எம்.பாஹிர், எம்.ரி.ரிபாய்தீன், கணக்காய்வாளராக எம்.ஐ.எம்.இர்பான் மற்றும் நிருவாக உறுப்பினர்கள், விளையாட்டுக் குழு தலைவர்கள், உடற்பயிற்சியாளர்கள் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.