தீக்கிரையாக்கப்பட்ட கொழும்பு கஜீமாவத பகுதிக்கு உதவுங்கள்-சமன் குமார்

thumb 21
thumb 21

கஜீமா தீ விபத்தில் தீக்கிரையாக்கப்பட்ட எளியவர்களின் வாழ்க்கையை அரசியலாக்காமல் அனைத்து கட்சிகளும் இணைந்து இத்தருணத்தில் மக்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர் சமன் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மாதம்பிட்டி கொழும்பு கஜீமாத்த தீ விபத்து திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் நடைபெற்றது. அதனை அடுத்து தீயணைப்பு படையினரின் உதவிகளால் தீப் பரவல் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சுமார் 34 வீடுகள் முற்றாக சேதமடைந்தது அங்கு இருந்தவர்களின் சான்றிதழ்கள் பாடசாலை பிள்ளைகளின் புத்தகப்பை அவர்களது பிறப்பு சான்றிதழ்கள் ஆவணங்கள் அனைத்து உடைமைகளும் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்த தீப்பரவலின் பிறகு அவர்களுக்கு உண்ண உணவு உடுத்த உடை இருக்க இடம் இல்லாமல் தத்தளித்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானவற்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் கிராமசேவகர் பிரதேச செயலாளர் மற்றும் அனைத்து அதிகாரிகளும் அந்த இடத்துக்கு வந்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

எனவே தீக்கிரையாக்கப்பட்ட எளியவர்களின் வாழ்க்கையை அரசியல் ஆக்காமல் அனைத்து கட்சிகளும் இணைந்து இத்தருணத்தில் மக்களுக்கு என்ன உதவி செய்யலாம் என்பதையே கவனத்தில் கௌ்ள வேண்டும். பொய் வாக்குறுதிகளை தர வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த நல்லாட்சியில் வீட்டுத் திட்டத்தை நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கொழும்பில் ஒரு அடிக்கல் கூட நடவில்லை என்பது வருத்தத்துக்கு உண்டான விடயமாகும். தொடர்ந்தும் எதிர்க்கட்சி எமது மக்களை ஏமாற்ற முடியாது . இனி வரும் காலங்களில் கொழும்பு வாழ் மக்கள் சிந்தித்து செயல்படுவார்கள் என்று தெரிவித்தார்.