19வது திருத்தம் தொடர்பில் அதிகார போட்டி

gotabaya rajapaksa with mahinda rajapaksa
gotabaya rajapaksa with mahinda rajapaksa

19வது திருத்த சட்டத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்குமிடையில் பிரச்சினைகள் தோன்றுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பிரதமரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 19 வது திருத்தத்தினை இல்லாதொழிப்பதன் மூலம் பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் பிரதமராக தொடர்ந்து செயற்பட விரும்புகின்ற மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் 19 வது திருத்தத்தினை இல்லாதொழித்து அதிகாரங்கள் குறைக்கப்பட்ட பதவியை விரும்ப மாட்டார்.

இது தொடர்பில் ஜனாதிபதி- பிரதமரிற்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனையும் மீறி அவர்கள் 19வது திருத்தத்தினை இல்லாதொழிக்க முற்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை முழுமையாக எதிர்த்து நிற்கும் என மேலும் தெரிவித்துள்ளார்.