ஜனாதிபதி கோத்தாபயவின் கீழ் 31 நிறுவனங்களா??

gota and mahinda
gota and mahinda

வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழ் 88 அரச நிறுவனங்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கீழ் 31 நிறுவனங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கட்டுப்பாட்டில் முப்படைகள், பொலிஸ் மற்றும் அரச புலனாய்வு சேவை உள்ளிட்ட 31 நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அரச தகவல் திணைக்களம், அரச அச்சுத் திணைக்களம் மற்றும் அரச ஊடக நிறுவனங்கள் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் ஜனாதிபதியின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் 48 நிறுவனங்களும் புத்த சாசன, கலாசார மற்றும் மத விவகார அமைச்சின் கீழ் 40 நிறுவனங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்டுள்ள 64 பக்கங்களைக் கொண்ட இந்த வர்த்தமானியில் 29 அமைச்சர்களுக்கான விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.