எல்பிட்டிய பிரதேச சபை தவிசாளர் நியமனம்

elpitiya
elpitiya

எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளராக பி.ஏ.கருணசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பை இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் அதன் துணை தவிசாளராக என்.வி.ஜெயசேனவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன 29 ஆசனங்களைக் கொண்ட எல்பிட்டிய பிரதேச சபையில் 23,372 வாக்குகளை பெற்று 17 ஆசனங்களை கைப்பற்றியிருந்தது.