எம்.சி.சி. உடன்படிக்கையில் அரசாங்கம் கையெழுத்திட தயார்??

MillenniumChallengeCorporation
MillenniumChallengeCorporation

மிலேனியம் சவால் நிறுவனத்தின் 480 மில்லியன் டொலர் கொடையை பெறுவதற்கான உடன்பாட்டில் புதிய அரசாங்கம் கையெழுத்திடுவதற்குத் தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் போது பொதுஜன பெரமுன இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும், எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திடப் போவதில்லை என்றே கூறியிருந்தது.

ஆனால், தற்போது. அரசாங்கம் எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு தயாராகி வருவதாக ஐ.தே.க பொதுச்செயலர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், எம்.சி.சி உடன்பாட்டில் 70 வீதம் நல்லது என்று கூறியிருக்கிறார்கள். அடுத்து அவர்கள் உடன்பாட்டின் 90 வீதம் நல்லதே என்று கூறக் கூடும்.

எம்.சி.சி உடன்பாட்டில் தற்போதைய அரசாங்கம் கையெழுத்திட்டால் கூட ஆச்சரியமில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.