இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கேள்வி பதில் நிகழ்வு!

20210321 151140
20210321 151140

சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின் எதிர்பார்ப்பு எனும் தொனிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கேள்வி பதில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில், இளைஞர் வலையமைப்பின் தலைவர் சுந்தரலிங்கம் நக்கீரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது இளையோரினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோரை நோக்கி பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது.

குறித்த கேள்விகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இறுதியில் பதில்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.