கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா நியமனம்

2 2
2 2

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும், ஆயுதப்படைகளின் தலைவருமான கோத்தபாய ராஜபக்ஷ, ரியர் அட்மிரல் ருவன் பெரேராவை இலங்கை கடற்படையின் பிரதானியாக நியமித்துள்ளார்.

2021 மார்ச் 21 முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படை தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் ருவான் பெரேராவுக்கு நியமனக் கடிதத்தை முறையாக வழங்கினார்.

36 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க நேற்று ஓய்வு பெற்றார்.

நேற்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர் நாயகர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.