பரீட்சை நிறைவடைந்ததும் அமைதியாக கலைந்து செல்லவும்

sanath poojitha
sanath poojitha

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடையவுள்ளது.

பரீட்சை நிறைவடைந்த பின்னர் பரீட்சை நிலையங்களிலோ நிலைய வளாகங்களிலோ அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மாணவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் மாணவர்களின் பெறுபேறுகளை இரத்துச் செய்யும் அதிகாரம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு இருப்பதாக தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற மாணவர்களைக் கைது செய்ய நாடு தழுவிய ரீதியில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சகல பரீட்சைகள் நிலையங்களுக்கும் அருகில் நடமாடும் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் சீரற்ற காலநிலையால் பரீட்சைகளை எதிர்கொள்வதற்கு மாணவர்கள் சிரமப்பட்ட வேளையில் அதற்கான உதவிகளை மேற்கொண்ட முப்படைகளுக்கும் இதன் போது நன்றி தெரிவிப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.