ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை ஆராயும் உப குழு இன்று கூடுகிறது

image 5d1dd5264f
image 5d1dd5264f

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இன்றும் நாளையும் மீள கூடவுள்ளது.
அந்த குழுவின் செயலாளர் ஜனாதிபதி சட்ட பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹனதீர இதனை தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு நாட்களில் குறித்த அறிக்கையின் இறுதி பரிந்துரை தயாரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட இந்த குழுவின் அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அந்த குழுவின் செயலாளர் ஜனாதிபதி சட்ட பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹனதீர இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நாடாளுமன்ற செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

இதன்படி ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த ஒத்தி வைப்பு வேளை விவாதம் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறவுள்ளன.