வடக்கு, கிழக்கில் தமிழிற்கு முன்னுரிமை

polis station
polis station

தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிக்கு முன்னுரிமையளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் அரசகரும மொழிகள் ஆணைக்குழு விடுத்த பரிந்துரையின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமையளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் என குறிப்பிடாமல் காவல்துறை என தமிழில் குறிப்பிடும்படி அரசகரும மொழிகள் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது.

சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளரிற்கு வழங்கப்பட்டிருந்த பரிந்துரைக்கமைய பொலிஸ்மா அதிபருக்கு இது தொடர்பான நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.