யாழ்.மேலதிக அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் பதவியேற்பு

m.pratheepan
m.pratheepan

பொது நிருவாக அமைச்சின் இடமாற்றத்திற்கமைய யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் தனது கடமைகளை இன்று (Dec12) பொறுப்பேற்றார்.

யாழ் மேலதிக அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன், முல்லைத்தீவு மேலதிக அரச அதிபராகவும், முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன், முல்லைத்தீவு மேலதிக அரச அதிபராக வரும் திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.