அரச நிறுவன தலைவர்களின் சம்பளம் குறைக்கப்படுகிறது!!

1 d 1
1 d 1

புதிய சம்பள கட்டமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளமையினால் அரச நிறுவனங்களின் தலைவர்களின் சம்பளம் குறைக்கப்படவுள்ளது.

தலைவர், அரச நிறுவனங்களின் பணிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்சபை பதவிகளில் உள்ள நபர்களை நியமிப்பது பெரும்பாலும் அரசியல் நியமனமாகவே உள்ளது. அவர்களிற்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களிற்கான சம்பளத்தினை குறைத்து அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க புதிய அரசு முடிவு செய்துள்ளது.