சுவிஸ் அரசின் மீது குற்றச்சாட்டு முன்வைப்பு

tamara kunanayagam
tamara kunanayagam

அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்காகவே குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் விசாரணை அதிகாரி நிஷாந்த டி சில்வா சுவிற்சர்லாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சுவிசர்லாந்திற்கான முன்னாள் இலங்கைத் தூதர் தமரா குணநாயகம் குற்றம் சாட்டியுள்ளார்.

நிஷாந்தவிடம் முக்கிய ஆவணங்கள் இருப்பது மேற்கிற்கு தெரிய வந்துள்ள நிலையில் இலங்கை மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையென குறிப்பிடவே நிஷாந்த சில்வா பயன்படுத்தப்படவுள்ளார்.

இதனால் இலங்கை அரசு எச்சரிக்கையாக செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதற்கு உடந்தையாக சுவிஸ் அரசு செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.