காடழிப்பு இடம்பெற்றது உண்மை என்கிறார் எஸ்.பி திஸாநாயக்க

download 37
download 37

நாட்டில் ஓரளவு காடழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளமைய தாம் ஏற்றுக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உண்மையான விடயம் அதுவல்ல. சிறிய காடழிப்புக்கள் இடம்பெற்றன. இன்று அதிரடிப்படையினர், காவல்துறையினர், இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு அவற்றை கட்டுப்படுத்தி வருகின்றோம். அதனால்தான் 99 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மிகப்பெரிய காடழிப்புக்கள் இல்லை. இருப்பினும் சிறிய காடழிப்புக்கள், வேட்டையாடுதல்கள் என்பன இடம்பெற்றுள்ளன. இன்று மிகப்பெரிய முயற்சிகள் இடம்பெறுகின்ற நிலையில் சிறிய மரங்கள் வெட்டப்பட்டுள்ளமை, குழிகள் தோன்டப்பட்டுள்ளமை குறித்தும் ஊடகங்களில் வெளியாகியிருக்கலாம். போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் பணிகளைப் போன்று, காடழிப்புக்களைத் தடுக்கும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன.

இதேவேளை, அரிசி விலை அதிகரித்திருந்தாலும், நெல்விலை அதிகரிக்க்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைய முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டால், அதற்கு உடனடி தீர்வு எட்டமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நலன்களை கருத்தில் கொண்டு உள்நாட்டில் உள்ள அரிசினை விற்பனைக்கு எடுத்துக்கொள்ளும் முயற்ச்சியில் அரசாங்கம் தற்போது ஈடுப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.