வட மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ்??

charls
charls

வட மாகாண ஆளுனராக பி.எஸ்.எம்.சார்ள்ஸினை நியமிப்பது குறித்து பரசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களின் முன்னாள் அரசாங்க அதிபராக செயற்பட்டு வந்த இவர், பின்னர் சுங்கத்திணைக்கள பணிப்பாளராக பணியாற்றி வந்தார்.

நாட்டின் 9 மாகாணங்களில் 8 மாகாணங்களிற்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாணத்திற்கான ஆளுநர் நியமனம் மாத்திரம் நிலுவையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.