மாகாண சபை தேர்தலினை நடத்துவதற்கு 500 மில்லியன் ரூபாய் செலவாகும் – பெங்கமுவே நாலக தேரர்

monk 720x4041 1
monk 720x4041 1

மாகாண சபை தேர்தலினை நடத்துவதற்கு சுமார் 500 மில்லியன் ரூபாய் செலவாகும். இது தேசிய குற்றமாகும் என பிக்குகள் முன்னணியின் தலைவர் பென்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாகாண சபை தேர்தலை பீதியுடன் நடத்த வேண்டாமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் பென்கமுவே நாலக தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “மாகாண சபை அமைப்பு இந்த நாட்டுக்குத் அவசியமான ஒன்றல்ல. அதன் பலத்தினால் பெறப்பட்டது ஒன்றுமல்ல.

மேலும் இதனால் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. மாகாண சபை தேர்தல் தோல்வியடைந்ததால் மக்கள்  எவரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை.

இதேவேளை ஜனாதிபதியும் பிரதமரும் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளனர். அதன்போது மாகாண சபைகள் தொடர்பாக ஒரு முடிவை எடுக்க முடியும்.

எனவே மாகாண சபை தேர்தல் குறித்து பீதி அடைய வேண்டாம் என நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகிறோம்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலுக்காக சுமார் 500 மில்லியன் ரூபாய் செலவழிப்பது தேசிய குற்றமாகும்.

இதேவேளை மாகாண சபைத் தேர்தலையை ஒத்திவைக்கக் கோரி, பிக்குகள் கையெழுத்திட்ட கடிதமொன்றும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.