கல்வி அமைச்சின் கீழ் வந்த ஊவா தமிழ்க் கல்வி அமைச்சு

download 1 36
download 1 36

ஊவா மாகாணத்தில் தனித்து இயங்கிய தமிழ்க் கல்வி அமைச்சு, அதிவிசேட வர்த்தமானி மூலம், பொதுவான கல்வி அமைச்சின் கீழ் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில்  இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சானது, கடந்த 3 ஆண்டுகளாக, மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர்வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், கூட்டுறவு விவகார அமைச்சு என்பனவற்றடன் ஒருங்கிணைந்த அமைச்சாக செயற்பட்டு வந்தது.

தமிழ்க் கல்வி அமைச்சு தவிர்ந்த கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல், சட்டமும் சமாதானமும், மாகாண உள்ளூராட்சி, மின்சக்தி, வலுசக்தி, நிர்மாணத்துறை, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காணி தொடர்பான அமைச்சு என்பனவற்றுடன் ஒருங்கிணைந்த அமைச்சாக செயற்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 17ஆம் திகதிக்கு திகதியிடப்பட்ட குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்லினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஊவா மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கூட்டுறவு விவகாரம் தொடர்பான அமைச்சுகளின் விடயதானங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்ட தமிழ்க் கல்வி அமைச்சு, அதிவிசேட வர்த்தமானியின் மூலம் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண நிதியும், திட்டமிடலும், சட்டமும், சமாதானமும், கல்வி, மாகாண உள்ளுராட்சி, மின்சக்தி, வலுசக்தி, நிர்மாணத்துறை, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காணி தொடர்பான அமைச்சுடன் தமிழ்க் கல்வி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி மூலம் இணைக்கப்பட்டுள்ளது.