வவுனியாவில் தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வு

IMG 0801
IMG 0801

வவுனியாவில் தந்தை செல்வாவின் 123ஆவது ஜனன தின நிகழ்வுகள் வவுனியா மணிக்கூட்டு கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தைசெல்வா நினைவுத்தூபியில் இன்று காலை இடம்பெற்றது.

நிகழ்வில் தமிழரசுகட்சியின் வவுனியா நகரசபைஉறுப்பினர் நா.சேனாதிராஜா அன்னாரது சிலைக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், அதன்பின்னர் ஏனையவர்களால், அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், கலந்து கொண்டிருந்தனர்.