மன்னாரில் இளைஞர்களின் சுயதொழில் ஆளுமை பற்றிய விசேட கலந்துரையாடல்

166183382 1580920912093490 4741774676709095957 n
166183382 1580920912093490 4741774676709095957 n

மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை கிராமத்தின் பொது நோக்கு மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் இளைஞர்களின் சுயதொழில் ஆளுமை மற்றும் தேசிய சபையின் தேசிய நிகழ்ச்சி திட்டங்கள் மற்றும் நிஸ்கோ கடன் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இதில் உரையாற்றிய தேசிய சம்மேளனத்தின் பிரதிநிதியும், இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் அலுவலகப் பிரிவு செயலருமாகிய ஹட்சன் தெரிவிக்கையில் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நாங்கள் இலங்கை திருநாட்டின் இளைஞர்கள் என்ற அடிப்படையிலும் தேசிய பிரதி நிதி என்ற அடிப்படையிலும் என்றும் நான் உங்கள் குரல்லாய் இருப்பேன். நான் மதம் மொழி பார்க்கிறவன் இல்லை. இளைஞர்களின் திறன் மற்றும் அவர்களின் மனிதநேயத்தை நேசிப்பவன் என மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அப் பிரதேச சம்மேளனத்தின் உறுப்பினர்கள், முசலி பிரதேச சமூதாயே சீர்திருத்த அதிகாரி மற்றும் முன்னாள் முசலி பிரதேசத்தை சேர்ந்த மன்னார் மாவட்டத்தின் தேசிய பிரதிநிதியும் கலந்துகொண்டனர்.