இங்கிலாந்து தேர்தலின் பின்னர் கருத்துக் கணிப்பு முடிவு

2a 18
2a 18

வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, போரிஸ் ஜொன்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தின் பொதுத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்றது. 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து பிரிட்டிஷில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின் டிசம்பரில் இடம்பெறும் முதல் தேர்தலாகவும் பார்க்கப்படுகின்றது.

பிரிட்டிஷ் நேரப்படி இன்று காலையாகும்போது பெரும்பாலான தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலும் பெரும்பான்மை வாக்குகளை பெறுபவர்களைக் கொண்டு இந்தத் தேர்தல் மூலம் 650 எம்.பிக்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து விலகுவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தது. இதன் தொடராக உடனடியாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.   இதில் போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சியும், ஜெரேமி கோர்பி தலைமையிலான தொழிலாளர் கட்சியுமே பிரதான போட்டியாளர்களாக கருதப்பட்டது.