யாழ் வைத்தியசாலைக்குள்ளும் கொரோனா தொற்று-கேதீஸ்வரன்

download 5 1
download 5 1

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர்களில் இருவர் கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகள் என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 778 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது அவர்களில் 22 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாதி உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றுறுதியானவர்களில் மேலும் மூவர் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டவர்களாவர்.

அத்துடன் மேலும் இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் தலா ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.