மரியசேவியர் அடிகளுக்கு இன்று இறுதி அஞ்சலி! – யாழ். ஆயர் தலைமையில் இரங்கல் திருப்பலி

625.500.560.320.160.600.666.800.900.160.90
625.500.560.320.160.600.666.800.900.160.90

கலை இலக்கியத்துறையில் கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக தன் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்துக் காலமான யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபகர், இயக்குநர் கலைத்தூது அருட்கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

மரியசேவியர் அடிகளின் புகழுடல் நேற்று திங்கட்கிழமை காலை 10 மணி முதல் யாழ். ஆயர் இல்ல சிற்றாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று காலை 8 மணிக்கு யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் ஆரம்பமாகும்.

தொடர்ந்து காலை 9.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

அதன்பின்னர் மரியசேவியர் அடிகளின் புகழுடல் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் என்று திருமறைக் கலாமன்றம் தெரிவித்துள்ளது.