வெள்ளரிப்பழத்தை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டும் அம்பாறை மக்கள்

22 2
22 2

வரட்சியான காலநிலை காரணமாக அம்பாறையில் வெள்ளரிப்பழம் உள்ளிட்ட பழவகைகள் அதிகளவு விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் அதிகளவு வெள்ளிரிப்பழம் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களும் வெள்ளரிப்பழத்தினை கொள்வனவு செய்வதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதேவேளை வெளி இடங்களில் இருந்து அம்பாறைக்கு கொண்டு வரப்படுகின்ற பழ வகைகளின் தரங்களை சுகாதார பரிசோதகர்கள், ஒவ்வொரு நாளும் சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் குறித்த வெள்ளரிப் பழம், 150 ரூபாய் முதல் சுமார் 350 ரூபாய் வரை பருமனுக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.