காவல்துறை வாகனம் மீது கல்லெறிந்த நபர் கெமராவில் சிக்கினார்

1617876197 1617874077 Protest L
1617876197 1617874077 Protest L

கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது காவல்துறையினரின் வாகனம் மீது நபரொருவர் கல் ஒன்றை எறியும் காட்சி கெமராவில் பதிவாகியிருந்தது.

ஆர்ப்பாட்ட பேரணி கோட்டை புகையிரத நிலையத்தினை கடந்து முன்னோக்கி நகர்ந்த போது நபரொருவர் வீதியில் பயணித்த காவல்துறையினரின் வாகனம் மீது இவ்வாறு கல் ஒன்றை எறிந்து விட்டு ஓடும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த சம்பவம் தொடர்பில் வண. ஜம்புரேவெல சந்திரரதன தேரர் உட்பட இருவர் கோட்டை காவல்துறையினரால் இன்று மதியம் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோட்டை காவல்துறையினரினால் தற்போதைய நிலையில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.