பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை செய்ய திட்டம்!

download 2 9
download 2 9

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மேலும் சில உற்பத்திகளை தடை செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் இவ்வாறு தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ள உற்பத்திகளின் பட்டியல் சுற்றாடல் அமைச்சுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் அது தொடர்பில் தொடர்ந்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தடை செய்யப்படுகின்ற, சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனுக்கு பதிலாக மாற்று உற்பத்திகளை அறிமுகப்படுத்தும் வேலைத் திட்டம் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன், பிளாஸ்டிக், காற்றடைக்கப்பட்ட பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள், 20 கிராம் மற்றும் 20 மில்லிலீற்றருக்கு குறைந்த நிறைகொண்ட ஷஷே பைக்கற்றுக்கள் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.