தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக மூடல்

download 2 11
download 2 11

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்று பிற்பகல் முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் யூ.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள காய்கறிகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக 6 மில்லியன் கிலோ கிராம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தக சங்கத்தின் தலைவர் யூ.பி.ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.