புத்தாண்டின் பின்னர் சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்!

download 3 5
download 3 5

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய்பிங் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் சீன பாதுகாப்பு அமைச்சர் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த சந்திப்புக்களின் போது இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சீன ஜனாதிபதியின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.