மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்!

IMG 0139 1536x1152 1
IMG 0139 1536x1152 1

தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நேற்று இரவு சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

பிலவு வருடப்பிறப்பில் மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்த பக்தர்களும் மருத்துநீர் தேய்த்து வழிபாடுகளை முன்னெடுத்தனர்.

பிலவு வருட சிறப்பு பூஜையினை ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்ததரராஜ குருக்கள் நடாத்திவைத்தார்.

தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டின் போது நாட்டில் நீண்ட சாந்தியும் சமாதானமும் நிலவும் கொரனா அச்சுறுத்தல் நீங்கவும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பிலவு வருட புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களுக்கு கைவிசேடம் வழங்கப்பட்டதுடன்ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.