கிழக்கின் தலைமைத்துவம் தமிழரின் கைகளிற்கு வர வேண்டும்

karuna 3
karuna 3

கிழக்கில் தமிழ் மக்களை பாதுகாக்கப்படுவதற்கு அதன் தலைமைத்துவம் கிழக்கின் தமிழர் ஒருவரிற்கு வர வேண்டியதன் அவசியத்தை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் வலியுறுத்தியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு இளைஞர்களின் பங்கு இன்றியமையாதது. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தி கொடுக்கபடும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

எமது உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாம் எமது வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும். எதிர்வரும் தேர்தல்களில் எமது வாக்குகளை சரியாக பயன்படுத்தி அமைச்சுக்களை பெறுவதன் மூலமே எம்மை நிலைறிறுத்த முடியும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டும் என்றால் சிங்கள மக்களுடன் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். அதன் மூலம் கிழக்கின் தலைமை பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வந்தால் தமிழ் மக்களை அவர் பாதுகாத்து கொள்வார்.

தமிழ் மக்களின் பாதுக்காப்பு வேலியாக நான் இருப்பேன் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது நான் உங்களுடன் இருந்து பாதுகாப்பேன் என குறிப்பிட்டார்.