கொடுப்பனவை மீளப்பெற கூடாது என பிரதேசசபை உறுப்பினர் வலியுறுத்து

IMG 1356
IMG 1356

அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற கொடுப்பனவை சேமிப்பில் வைக்குமாறு கோராமல் உடனடி பயன்பாட்டிற்கு வழங்குமாறு பிரதேசசபை உறுப்பினர் துஸ்யந்தன் விக்டர்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் அரசாங்கத்தால் வழங்கப்படும் 5ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை சமுர்த்தி சேமிப்பில் இடுமாறு பயனாளர்களிற்கு அறிவுறுத்தப்படுகின்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வறுமை கோட்டிற்கு உட்பட்ட சிலகுடும்பங்களிற்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை சமுர்த்தி சேமிப்பில் வைப்பிலிடுமாறு சில கிராமங்களில் அறிவுறுத்தப்படுகின்றமை, ஏற்க முடியாத செயல்.

குறிப்பாக கோவிட்-19 தொற்றால் தொழிலின்றி பாதிக்கப்படும் குடும்பங்கள், மற்றும் வறுமை கோட்டிற்குட்பட்ட பல குடும்பங்களிற்கு இந்த கொடுப்பனவு பயனுடையதாக இருந்துள்ளது.

இந்நிலையில் வவுனியாவின் சில கிராமப்பகுதிகளில் குறித்த தொகையினை சமுர்த்தி சேமிப்பில் வைப்பிலிடுமாறு உத்தியோகத்தர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு முறைப்பாடுகளை வழங்கியிருந்தனர். மக்களின் உடனடி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட அந்த நிதியினை சேமிப்பில் வைப்பிலிடுமாறு கோருவது முறையற்ற செயல்.

எனவே இது தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன் அந்த பணத்தினை பொதுமக்களின் உடனடி பயன்பாட்டிற்கு வழங்குமாறு கேட்டுள்ளேன். அவர் அதனை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.