இலங்கை மற்றும் இந்திய விஞ்ஞானிகள் இணைந்து ஆராய திட்டம்

download 31
download 31

இலங்கை மற்றும் இந்திய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து, பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இரு நாட்டினதும், விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சுகளின் பங்களிப்புடன், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது

இதன்படி, இலங்கை மற்றும் இந்திய நாடுகளைச் சேர்ந்த ஒன்பது விஞ்ஞானிகள் குழு, இந்த ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவுத் தொழில்நுட்பம், தாவர அடிப்படையிலான மருந்துகள், அளவியல், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயன்பாடுகள், தொழில்துறை மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கழிவு முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்த ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆய்வுக்காக சர்வதேச அளவில் 193 பொதுவான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், 27 முன்மொழிவுத் திட்டங்களை அடிப்படையாக கொண்டு இரு நாடுகளும் இந்த ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.

2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் காரணமாக, இந்த திட்டங்களுக்கான அழைப்பு வந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.