அதிவேக வீதியில் இன்று முதல் விசேட கண்காணிப்பு நடவடிக்கை!

download 3 7
download 3 7

அதிவேக வீதியில் இன்று முதல் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது அதிவேக வீதியில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், விபத்துகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாகனங்களுக்கிடையில் போதுமான இடைவெளி காணப்படாமை காரணமாக தெற்கு அதிவேக வீதியில் நேற்றைய தினம் விபத்து ஏற்பட்டதாகவும் பிரதிக் காவல்துறைமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அதிவேக வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் போதுமான இடைவெளியினை கடைபிடிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன சாரதிகளை அறிவுறுத்தியுள்ளார்.