கத்திக்குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

image 2021 04 16 222012
image 2021 04 16 222012

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

குறித்த நபர் மீது குடும்பத் தகராறு காரணமாக கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் நீராவிப்பிட்டி பகுதியை சேர்ந்த 39 வயதுடைய முகமட் றஜாஜ் என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.