அதிவேக நெடுஞ்சாலையில் இன்று விசேட சுற்றிவளைப்புகள்

highway
highway

அதிவேக நெடுஞ்சாலையில் இன்றும், நாளையும் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களில் வாகன சாரதிகள் அவதானமாக செயற்பட வேண்டும்.

குறிப்பாக பண்டிகை விடுமுறைகளுக்காக தமது சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் கொழும்பு நோக்கி பயணிப்பவர்கள் வீதி சட்டங்களை உரிய முறையில் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அவ்வாறு வீதி சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்