பாடசாலை வாசல் வரை வாகனங்கள் செல்வதால் மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகள்

IMG a21acb9bd5b0ccd8064bc069487fa93d V
IMG a21acb9bd5b0ccd8064bc069487fa93d V

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் இரண்டாம் வாசலான கேட்போர் கூடத்திற்கு அருகிலுள்ள பாடசாலை வாசல் வரையில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும் மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து செல்லும் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்திற்கு இரண்டு பிரதான வாசல்கள் காணப்படுகின்றன. இவ் வாசலினால் மாணவர்கள் இரு பிரிவுகளாக சென்று வருகின்றனர் ஆரம்பபிரிவு மற்றும் உயர் தர மாணவர்கள் இவ்வாறு சென்று வருகின்றனர் . எனினும் இரண்டாம் வாசலான கேட்போர் கூடத்தின் பிரதான வாசலினால் ஆரம்பப்பிரிவு மாணவர்களை அழைத்து செல்லும்போது குறித்த வாசல் வரை வாகனங்களில் மாணவர்களை அழைத்து செல்லப்படுகின்றனர் .

இந்த நடைமுறை முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டு மாணவர்கள் பிரதான வீதியில் இறக்கிவிடப்பட்டு நடந்து வாசல்வரையும் சென்றபோது அப்பகுதியில் வாகன நெரிசல் இடையூறுகள் ஏற்படவில்லை ஆனால் தற்போது அந்நடைமுறை முற்றிலுமாக மீறப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகின்றது . அத்துடன் மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன . இதனால் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

முன்னர் நடைமுறையிலிருந்த பிரதான வீதியில் மாணவர்களை இறக்கிவிட்டு வாசல் வரையும் நடந்து செல்லும் நடைமுறையினை பின்பற்றி மாணவர்களை பாடசாலைக்குள் அனுமதிக்கும் நடைமுறையினை பின்பற்றுவதற்குரிய நடவடிக்கையினை பாடசாலை சமூகம் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் தலையிட்டு நடைமுறைப்படுத்ததுவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மேலும் தெரிவித்துள்ளனர் .